|
நீலகிரி மாவட்டத்தின் [Nilgiris District], பெரும் பகுதி மலைகலே. இதன் தலைமையகம் உதகமண்டலம். பிரபலமாக ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இதன் தொடர் மலைகள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடக எல்லைகளாக பரவி உள்ளது. நீலகிரி என்னும் மலை, மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர் ஆகும். இம்மலைத்தொடர்களின் உச்சம் தொட்டபெட்டா, இது சுமார் 2,623 மீ. உயரம் ஆகும்.
நீலகிரி மாவட்டம் [Nilgiris District], 2,452 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இம்மாவட்டம், மலைப்பாங்கான இடம் மட்டுமல்லாது, இது சுமார் கடல் மட்டத்தில் இருந்து 2000 முதல் 2600 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் தனது வடக்கு எல்லையை கர்நாடக மாநிலத்தின் மைசூரையும் கேரள மாநிலத்தின் வயநாடு [Wayanad District] மாவட்டத்துடனும், மேற்க்கில் கேரள மாநிலத்தின் மலப்புரம் [Malappuram District] மற்றும் பாலக்காடு [Palakkad District] மாவட்டத்துடனும், தெற்கில் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்துடனும் [Coimbatore District], கிழக்கில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டமும் [Erode District] கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டமும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் [Nilgiris District], முக்கிய நகரங்கள் கோத்தகிரி, குன்னூர், கூடலூர் மற்றும் அரவங்காடு ஆகும். குன்னூரின் மிகவும் பிரபளமான “Lamb's Rock” மற்றும் சிம்ஸ் பூங்கா [Sims park] உள்ளது. சிம்ஸ் பூங்காவில் [Sims park] வருடம் தோறும் கோடை காலத்தில் [மே மாதம் கடைசி வாரம்] பழக்கண்காட்சி மற்றும் பூக்கண்காட்சி நடைபெறும். இந்தப் பூங்கா கோத்தகிரி செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் [Nilgiris District], 6 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.
* Coonoor Taluk - குன்னூர் வட்டம்
* Gudalur Taluk - கூடலூர் வட்டம்
* Kotagiri Taluk - கோத்தகிரி வட்டம்
* Kundah Taluk - குந்தா வட்டம்
* Pandalur Taluk - பந்தலூர் வட்டம்
* Udhagamandalam Taluk - உதகமண்டலம் வட்டம்
|