Login

Lost your password?
Don't have an account? Sign Up

கற்றல் | தவறு | வெற்றி | தேடல் | நாளும் பல நற்செய்திகள் செந்தமிழன் சீமான் 21-10-2022

Contact Us To Add Your Business

கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும்தான் பிறந்தோம்.

குறைகளைச் சொல்லிக் காயப்படுத்த அல்ல.
தவறு எனில் கற்றுக்கொடுங்கள்.
சரி எனில் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒருபோதும் தவறு செய்யாத எவரும், புதியதை முயற்சித்ததில்லை.

நம் பயம் எதிரிக்குத் தைரியத்தைக் கொடுக்கும்.
நம் அமைதி அவனுக்குக் குழப்பத்தைக் கொடுக்கும்.
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் வென்றதில்லை.

யாரை எங்கே நிறுத்தவேண்டும் என்பதைவிட, நாம் எங்கே நிற்கவேண்டும் என்பதை உணர்வதே சிறந்தது.

வெற்றி பெறுபவர்கள் எப்போதும் மிகச்சிறந்த காரியங்களைச் செய்வதில்லை. சாதாரண வேலையைக்கூட மிகச்சிறந்த முறையில் செய்கின்றனர்.

ஒருமுறை விழுந்து பாருங்கள். எழும்போது உலகம் உங்களுக்குப் புதிதாகத் தெரியும்.
ஒருமுறை தோற்றுப்பாருங்கள். வெல்லும்போது உலகம் உங்களைப் புதிதாகப் பார்க்கும்.

நாம் ஒவ்வொரு நிலையிலும் தடுமாறாமல் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், உணர்ச்சி வசப்படும்போது வார்த்தைகளையும் , கோவப்படும்போது வார்த்தைகளையும், உதவிக்கு அழைக்காமலிருந்தால் போதும்.

தேடாதபோது கிடைப்பதும், தேடும்போது தொலைவதும் வாய்ப்புகள் மட்டுமல்ல, வாழ்க்கையும்தான்.

Click Here To Add Your Business

7 comments

  1. Fluffy candyfloss ?

    காலை வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் மீண்டும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ???

  2. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும்ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த நம் வாழ்க்கை இது. உண்மை என்பதை நான் எடுத்துரைக்கிறேன். இதுதான் உண்மைஇறைவனால் படைக்கப்பட்டவை அதை உணர்ந்தால் அதை தெளிவுபடுத்துகிறேன்.
    அதை உணர்ந்தால் அதை தெளிவுபடுத்துகிறேன். நேற்று நீங்கள் பேசிய ஆடியோ சொற்பொழிவு நான் நேரடி ஒளிபரப்பில் இல்லை என் சாய்க்குட்டி ஸ்கேட்டிங் கிளாஸ் போனதால் நான் அதை பார்க்க முடியவில்லை இரவு 10 மணிக்கு பிறகு என் சாய் குட்டி பாப்பா நம் கை தட்டுவோம் சீமான் அண்ணா லைவ் எடுங்கன்னு சொல்லுது. எப்படி கைத்தட்ட முடியும் என்று அவருக்கு பதில் கொடுத்தேன்.
    என் குழந்தை கேட்கின்றதுஅதுக்கு அதில் ஒரு விருப்பம் பாருங்கள் உண்மையில்உண்மையில் நேற்று பேசிய ஆடியோ அருமை அற்புதம்தமிழ் வெல்லும் ஒரு அருமை வார்த்தைகள்உண்மை சத்தியம் அவ்வளவு ஒரு உடலில் ஒரு உணர்வு வேகம் ஏற்பட்டது நேற்று பேசிய இப்பொழுது கேட்ட ஆடியோ உண்மை சத்தியம்.எல்லாம் அவன் செயல் அவநின்றி ஓர் அணுவும் அசையாது வாய்மைமை வெல்லும்.

  3. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான்அண்ணா அழகான தலைப்பு தலைப்பு ஏற்ற வாக்கியங்கள் வார்த்தைகள் கருத்து தெளிவு சிந்தனை அனைத்தும் உண்மை அதுதானே உண்மை இதெல்லாம் உணராத மனிதர்கள் என்ன? சொல்வதுஉண்மையில் எவ்வளவு மனிதர்கள் சரியான சொற்பொழிவுகள் இருக்கிறது ,அந்தச் சொற்பொழிவு வார்த்தை கருத்து தெளிவு சிந்தனை இருந்தால் மட்டும்தான் அந்த மனிதனுக்கு அதுு புரியும்,எவ்வளவு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஏன் இந்த மனிதர்கள் இன்னும் இப்படி இருக்கிறார்கள் என்று தான் வருத்தமாக இருக்கிறதே ஒழிய வேற என் ஒன்றும் இல்லை ஆனால் எது சரி தவறு என்று தெரிந்து விட்டால் இந்தமனிதர்கள் வாழ்க்கை இன்ப மையம் அந்த இன்பம் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் இன்பம் என்று வேறொரு வழியை நோக்கி செல்வதானால் தான் முடிவின் துன்பமயமாகிவிட்டது.
    தேவையில்லாத வார்த்தை கேட்பவை பார்ப்பவை எல்லாம் மனிதனை துன்பத்தில் உள்ளாக்குகிறது இதுதான் உண்மை சத்தியம் .அழகான தலைப்பு தலைப்புக்கேற்ற வார்த்தைகள் இதைவிட வேறென்ன வேண்டும் என்று சொல்வதற்கு வார்த்தை இல்லை இதுதான் உண்மை சத்தியம் கடந்தவை நடந்தவை நடக்கின்றவை எல்லாம் சிறப்பாக இருக்கும் இதுதான் உண்மை .என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE