இராணிப்பேட்டை: பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகள்! – சீமான்
Contact Us To Add Your Business
இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் தொழிற்சாலைக்கழிவுகளைச் சுத்திகரிக்காது பாலாற்றில் கலந்துவிடும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.
தோல் பதனிடுதல், சாயத் தொழில், சர்க்கரைத் தொழில்கள் போன்ற நீர் சார்ந்த தொழில்கள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. இவற்றில் உருவாகும் இரசாயன கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, தொழிற்சாலையின் மறுபயன்பாட்டிற்கு உகந்த வகையில் சுத்திகரிக்கப்படவேண்டும். ஆனால் தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத அல்லது ஓரளவு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை அதிக அளவில் ஆற்றிலே விடப்படுகிறது. வேலூர், இராணிப்பேட்டை பகுதிகளில் இயங்கிவரும் தோல் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் குறித்துப் பலமுறை நீதிமன்றங்களும், மாசு கட்டுப்பாடு வாரியமும் கண்டித்ததோடு நடவடிக்கைகளும் எடுத்துள்ளன. இருப்பினும் தொடர்ந்து கழிவுகள் பாலாற்றில் கலக்கப்படுவது குறைந்தபாடில்லை.
பாலாற்றில் கலக்கப்படும் இரசாயனக்கழிவுகளால் அப்பகுதியின் நிலத்தடி நீர் முற்றாக மாசடைந்து மக்களின் குடிநீருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, பாலாற்று நீரை அருந்தும் கால்நடைகளும் உயிரிழக்கும் துயரங்கள் நேர்வது பெரும் வேதனையைத் தருகிறது. அளவுக்கதிகமான கழிவுநீர் கலப்பால் வேளாண்மை செய்யமுடியாத அளவிற்கு நிலம் மாசுப்பட்டு, மலட்டுத்தன்மை அடைந்துள்ளதால், அப்பகுதி விவசாயிகள் வேளாண்மையினை முழுவதுமாகக் கைவிட்டு, மாற்றுவேலைக்குச் செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் மிதமிஞ்சிய தொழிற்சாலைக்கழிவுகளால் நிலம், நீர், காற்று என யாவும் பெருமளவு கெட்டு, சுற்றுச்சூழல் முற்றாகச் சீர்குலைவதோடு, பல்வேறு கொடிய நோய்களுக்கும் அப்பகுதியினர் ஆளாகி மக்களின் சுகாதார வாழ்வும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர்
நன்றி அண்ணா
காற்று முற்றிலும் மாசடைந்து விட்டது மிகவும் மன வேதனை அளிக்கிறது
நாம் தமிழர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கும் இந்த அநியாயத்தை யாருமே கேட்க ஆளில்லையோ என்று நினைத்தேன் நன்றி… ஆற்றில் அதிக அளவு மண் வளம் சுரண்டப்பட்டு ஆறு செத்துவிட்டது.. அதுபோதாது என்று இவர்கள் மாசுபடுத்தி நாங்கள் எல்லோரும் போத்தல் தண்ணீர் தான் குடிக்கிறோம்.. ஒரு காலத்தில் தண்ணீர் சுவை மிக்கதாக இருக்கும் இன்று,😢
முருகன் நீ௹ழியில் , லட்சக்கணக்கான மக்களுடன், குமரிக் கண்டத்தில் இருந்து, காவடியுடன், கால்நடைகளுடன், கால்நடையாக, இலங்கையில் குடியேறி, 10,800 ஆண்டுகள் ஆகி விட்டது. உடனடி உணவு தேவைக்காக, வேளாண்மை ஆரம்பித்தார் முருகன். முல்லைக் காடுகளை அழித்து, பனங்காடுகளை, தீயிட்டு, திருத்தி | மருத நிலங்களாக்கி, மானாவரி பயிர்களான, தினை, சாமை என பயிரிட்டு, பசியாறினார்கள். அப்பொழுதுதான், மழைக்காக, பருவங்களை, கவனித்து , வருடங்கள், சித்தர்களால், குச்சி நட்டு , அவதானித்து, காலங்களை, கணித்தார்கள். அப்பொழது, ஆதி ஒறை, (orion Connstallation ) மகர சங்கராந்தியில் , அதிகாலை 4.30 மணியிலிருந்து, 5.30 வரை உதித்தது. அதை மையப்படுத்தி அன்றிலிருந்து , சித்திரை-1 ஐ மகர சங்கராந்தி யில், ஆரம்பித்தார் முருகன். அந்த orion Const – ஆதி ஒறை ஒவ்வொரு வருடத்திலும், 24 நிமிடங்கள், தாமதமாக வானில் எழவதை அவதானித்தனர். 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு நாள் அதிகமாவதை கவனித்து, அது சூரியனுடைய 1 திகிரி நகர்வு என புரிந்து கொண்டனர். அதிலிருந்து, இன்று வரை சூரியன் வானில் 180 திகிரி நகர்ந்து, இப்பொழுது கடக சங்கராந்தி சமயத்தில் வானில், காலை 4.30 மணியிலிருந்து 5.30 வரை எழம் நேரத்தை ‘கவனித்தால், கடக சங்கராந்தி, June – 21 -ல் நடந்தது. ஆனால் ஆதி ஓறை Juடy – 4ம் தேதி தான் 4.30 லிருந்து 5.30 மணிக்கு வானில் எழுந்தது. அதாவது சங்கராந்தி முடிந்து 13.5 நாட்கள் கழித்து, அதிகாலை வானில் தெரிகிறது. 13.5 நாட்கள் என்பது, 27 நல்சித்திரங்களில் பாதி நட்சத்திரங்களை, 180 திகிரி வானத்தை , இந்த 10,800 வருடங்களாக கடந்து , நகர்ந்து, இருக்கிறது என்று தெரிகிறது. சூரியனின் ஒரு நட்சத்திர நகர்வுக்கு, 798 ஆண்டுகள் ஆகும் என ஏற்கனவே, பார்த்து இருக்கிறோம்.
13.5 x 798 = 10,773 ஆண்டுகளாகியிருக்கிறது. மீன ராசியும் காலை 5.30 மணிக்கு, கடந்த 2020-ல் வானில் எழுந்து விட்டது. சூரியனும் 10,800 வருடத்திற்கு முன்னால், கன்னி ராசியிலிருந்து, 6 ராசிகளைக் கடந்து மீன ராசியில் இரண்டு வருடங்களுக்கு முன்னால், அடைந்து விட்டது. ராசிகளை உருவாக்கியவர் திருமால். முருகன் காலத்திலிருந்து ஆதி ஓறை மட்டும் கவனித்து, வருடங்கள் , தீர்மானிக்கப்பட்டது. ராவணன் காலத்திலிருந்து, நிலாவின் ஓட்டங்களை, வைத்து, நல் சித்திரங்கள், உருவாக்கப்பட்டு, வானை அவதானித்து வந்தார்கள். முருகன் காலத்திற்கு பின், 5400 ஆண்டுகளில் மீண்டும் ஒரு நீரூழி ஏற்பட்டது, அப்பொழுதுதான் பூம்புகார் , போன்ற நகரங்கள் , மூழ்கி 30 கிலோ மீட்டர் நிலங்கள், நீரில் மூழ்கியது. அது நடந்து 5393 ஆண்டுகள் , கடந்து விட்டது. இதுவரை சூரியன், தெற்கில் பயணித்துக் கொண்டு இருந்தது. இனி வரும் 7 ஆண்டுகள் கழித்து , சூரியனின் சம நாள் கடந்து, வடக்கில் பயணிக்க இருக்கிறது. பூமியில் , முருகன் காலத்தில் நடந்த, மிகப் பெரும் நிகழ்வுகள், வரும் காலங்களிலும் நடக்கலாம். முருகன் காலத்தில், தெற்கு தாழ்ந்து, வடக்கு உயர்ந்தது போல், இப்பொழது வடக்கு தாழ்ந்து, தெற்கு உயரலாம். காலத்தையும், இறைவனின் , செயல்களையும், நடப்பதையும், நாம் ஏற்றுக்கொள்ளத்தான் முடியும். மாற்ற முடியாது. மாற்ற நினைப்பது , முட்டாள்தனம்..