Login

Lost your password?
Don't have an account? Sign Up

மழையை யாரிங்கே மழையாய் பார்த்தது? – கவிப்பேரரசு வைரமுத்து கவிதை | நாளும் பல நற்செய்திகள் 03-12-2

Contact Us To Add Your Business

ஒரு துளி உதட்டில் …
ஒரு துளி கண்ணில்…
ஒரு துளி உயிரின் வேரில்….
***

என்ன…
என்ன சத்தம்?
சாத்தாதீர் ஜன்னல்களை
அது மழைக்கெதிரான
கதவடைப்பு

குடையா….
குடை எதற்கு?
அது
மழைக்கெதிராய்
மனிதன் பிடிக்கும்
கறுப்புக் கொடி

ஏன்…
ஏனந்த ஓட்டம்?
வரம் வரும் நேரம்
தபசி ஓடுவதா?
***
அய்யோ!

மழையோடு வாழாத
வாழ்வென்ன வாழ்வோ ?

மழையை யாரிங்கே
மழையாய் பார்த்தது ….?

திட்டுவார் அதிகாரி
மழைக்கு
ஊழியர் வைத்த பெயர்
'மெமோ'

மூழ்கியது பயிர்
மழைக்கு
விவசாயி வைத்த பெயர்
'கடன்'

கூட்டம் ரத்து
மழைக்கு
அரசியல்வாதி வைத்த பெயர்
'சனியன்'

விற்பனை மந்தம்
மழைக்கு
வியாபாரி வைத்த பெயர்
'நஷ்டம்'

வாடிக்கை இல்லை
மழைக்கு
விலைமகள் வைத்த பெயர்
'பட்டினி'

பள்ளி இல்லை
மழைக்கு
மாணவர் வைத்த பெயர்
'விடுமுறை '

மழையை யாரிங்கே
மழையாய்ப் பார்த்தது ?

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

17 comments

 1. @pravink-ls6nr

  வணக்கம் ….
  இன்னைக்காவது பிறமொழி சொற்களைத் தவிர்த்து பேசுவீர் என்று எதிர்பார்த்தேன்…

 2. @user-tx1wh1vl1r

  உங்கள் குரலில் இதை கேட்டு மனது வெட்கியது. அனுபவிக்கத் தெரியாமல் பெயர் வைத்தோமே.

 3. @infowell2560

  இயற்கை இறைவா…….எனக்கும் இயற்கை ரசிக்க மிகவும் பிடிக்கும்….சீமான் அண்ணா வாழ்க வளமுடன்.

 4. @fluffycandyfloss5045

  இயற்கை தாயின் மகன் அண்ணன் பிரபாகரன் பிதாமகன் கரிகாலன் தம்பி தமிழினத்தின் காப்பரண் எவ்வுயிர்களுக்கும் தாயாய் தந்தையாய் அன்புதனை பொழியும் சாயிஈசனின் மறுவடிவமாய் இருப்பவன் அண்ணன் சீமான்
  அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறைவனிடமும் மாவீரச்செல்வங்களிடமும்
  பிராத்திப்போம் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் அண்ணா
  👌👌👌👌👌👌👌

 5. @anoopprabhakar2007

  அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே.

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்தஎன் வாழ்க்கை இது உண்மை இது சத்தியம் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.

  இயற்கை அன்னைகொடுத்த அமைப்பு நாம் சரியாக பயன்படுத்துகிறோமா அந்த இயற்கை நமக்கு எவ்வளவு அழகு நாம் அதை உற்பத்தி பண்ண முடியுமா அதை செய்து விட முடியுமாஇயற்கை கொடுத்த அமைப்பு நாம் சரியாக பயன்படுத்துகிறோமா அந்த இயற்கை அன்னை நமக்கு எவ்வளவு அழகுநமக்கு வாழ படைக்கப்பட்டு இருக்கிறது
  அதை உணராத வரை நாம் கஷ்டப்பட போகிறோம். நாம் அதை உற்பத்தி பண்ண முடியுமா அதை செய்துவிட முடியுமா எதுவும் நம்மால் முடியாதுுஆனால் அவற்றை நாம் என்னென்ன செய்யக்கூடாதோ அத்தனையும் செய்துஅவற்றின் பாவத்தையும் சுமந்து அது மட்டும் இல்லை மனிதஅவற்றின் பாவத்தையும் சுமந்து அது மட்டும் இல்லை மனிதநேயம் இல்லாத மனிதர்களையும் மனிதனாக மதிப்பதும் இல்லை அன்புு கருணைகருணைக்கடல் கடல் இயற்கை அன்னை கொடுத்த கடன் அவற்றைக் கூட நாம் தெரியாமல் நாம் எவ்வளவு பாழ்படுத்துகிறோம் அதற்கெல்லாம் பதில் கிடைக்கும் தானே அந்த பதில் தான் சரியாக இருக்கிறது.

  அழகான தலைப்பு.மொட்டை மாடிக்கு போனேன் லேட் ஆக தான் போனேன் மழை பெய்து கொண்டிருப்பதால் மழை பெய்தது பத்து நிமிஷம் என் புறாவுக்காகசாப்பாடு வைத்துவிட்டு அதை ஒரு பதினஞ்சு நிமிஷம் இருக்கும்வந்துவிட்டேன் மழை பெய்வதால் அதனால்முதல் பதிவு உங்களுக்கு திரும்ப டீ குடித்துவிட்டு வருகிறேன்.

 6. @anoopprabhakar2007

  அன்புள்ள சீமான் அண்ணா இன்னும் ஆடியோ கேட்கவில்லை ஆனால் பதிவை கொடுத்து விட்டுட்டு திரும்ப பதில் வருகிறது நான் பதிந்ததற்கு சரியாக இருக்கிற மாதிரி இருக்கிறது திரும்பவேன்

 7. @ashkalaif88

  இந்த மழையின் ரகசியம் உடைத்தாய் என் இனிய இயற்க்கை உலவாலன் உன்னை மதிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் அண்ணா ❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE