Login

Lost your password?
Don't have an account? Sign Up

[LIVE] 09-05-2019 சித்தநாயக்கன்பாளையம் (சூலூர்) – சீமான் பரப்புரை | Seeman Speech Soolur LIVE

Contact Us To Add Your Business

அறிவிப்பு: *தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் (சூலூர்)* | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் *சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்* ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. *“விவசாயி”* சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

ஆறாம் நாளான இன்று 09-05-2019 வியாழக்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து *சின்னியம்பாளையம், பள்ளி திடலில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சித்தநாயக்கன் பாளையத்தில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

ஏழாம் நாங 10-05-2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து *கண்ணம்பாளையம் தியாகிகள் நினைவரங்கத்தில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *இருகூர்சுங்கத்தில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

24 comments

  1. selvakumar kumar

    புதியதோர் தேசம் செய்வோம் அதை புரட்சியால் உறுதி செய்வோம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் அதை நிறைவேற்றுவோம்

  2. Save Mothers

    அருமை சகோதர்களே மக்கள் நலன் குறித்து எவ்வளவு தேடுதல்கள் , எவ்வளவு பேச்சுக்கள் வாழ்த்துக்கள்

  3. SIVAKUMAR M

    முதல் முறையாக இந்து ஆங்கில நாளிதழ் இன்றைக்கு நாம் தமிழர் கட்சி தேர்தலில் நிற்கிறது என்று கூறி உள்ளது. நாம் தமிழர் நாமே தமிழர்

  4. eliyathamby kuncharalingam

    இரண்டு திராவிட கட்சிகளும் ;
    கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்தும் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது.
    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான கல்வி, தரமான மருத்துவம் அளிக்கப்படும்

  5. Disney Fernando

    இத்தனை காலம் ஏமாந்தது போதும்.

    உழவை காக்க, தமிழ்நாட்டை காப்பாற்ற அன்பான தாய் தமிழ் உறவுகளே, உங்கள் மதிப்புமிக்க வாக்குக்களை நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு அளியுங்கள்.

  6. bilora sathyanathan

    காணொளி தெளிவாக இல்லை உறவே… நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம் வெற்றி நமதே

  7. Jasmeen meera

    அண்ணனுக்கு மணி துளிகள் மிகவும் குறைவாக உள்ளது
    இருந்தாலும் மிக தெளிவாக பேசிக் கொண்டு இருக்கிறார்
    # நாம் தமிழர் #

  8. Ravi Kris

    நம் மானத்தையும் மண்னையும் பாதுகாக்க விவசாயி சின்னத்தில் வாக்களிப்பீ்ர் நாம் தமிழர்

  9. Siddiq Aslina

    புதியதோர் தேசம் செய்வோம் அதை புரட்சியால் உறுதி செய்வோம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் அதை நிறைவேற்றுவோம்

Leave a Comment

Your email address will not be published.

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE