Login

Lost your password?
Don't have an account? Sign Up

[LIVE] 12-05-2019 சிந்தாமணி கலையரங்கம் – சீமான் பரப்புரை | Seeman Today Speech Thirupparangundram

Contact Us To Add Your Business

அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

ஒன்பதாம் நாளான இன்று 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் *திருப்பரங்குன்றம்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *இரா.ரேவதி* அவர்களை ஆதரித்து *மதுரை, விலாச்சேரி மந்தைத் திடலில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *திருப்பரங்குன்றம், சிந்தாமணி கலையரங்கம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.

பத்தாம் நாள் 13-05-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில் *ஒட்டப்பிடாரம்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *மு.அகல்யா* அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், *செக்காரக்குடி*, பொட்டலூரணி சாலையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *ஒட்டப்பிடாரம் கடைவீதியில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

21 comments

  1. தமிழன் தமிழன்

    தமிழர் வீரபடை அறிவுசார்ந்த படை சீமான்படை.. வெல்வது உறுதி இதை எவனாலும் தடுக்க முடியாது…

  2. selvakumar kumar

    பெண்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது, ஒரு பெண் வீட்டை நிர்வாகிக்க திறமையுள்ளவள் நாட்டின் நிர்வகிக்க முடியும், எடுத்துக்காட்டு தான் சகோதரி ரேவதி.

  3. G P Raj

    வரலாற்றை மறைத்து, பண்பாட்டை தொலைத்து, மொழியை மறந்து, அடையாளத்தை அழித்த இந்த திராவிட, அரிய சூழ்ச்சியில் இருந்து தமிழன் மீண்டு எழுகிறான் ‘நாம் தமிழரால்’

  4. தாய் தமிழ்

    மங்கி யிருக்கும் விவசாயியின் வாழ்க்கை பொங்கி வரட்டும் அதற்கு நாம் தமிழர் கட்சி வென்று வரட்டும் ❤❤❤ சத்தியத்தின் பிள்ளைகள் சர்வ நிச்சயமாக வெல்வோம்

  5. Ravi Kris

    களத்தில் பயணிக்கும் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்………நீதியும் சத்தியமும் வெல்வதும் உறுதி வெல்வதும் உறுதி
    நாம் தமிழர்

  6. wahab ibrahim

    மக்களே பணத்திற்கு உங்கள் வாக்கை விற்று விடாதீர்கள் தமிழகத்தின் தலைநிமிர இயற்கை வளங்கள் மற்றும் தமிழர்களின் வாழ்வு செழிக்க வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் நாமே தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE